நாவலரைப் பற்றிய நூல்கள்

 1. ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்
 2. வண்ணார்பண்ணை வே. கனகரத்தின உபாத்தியாயர் எழுதியது; யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் சித்திரபானு வருடம் ஐப்பசி மாதம் (1882) அச்சிடப்பெற்றது. இரண்டாம் பதிப்பு, யாழ்ப்பாணம் நூற்றாண்டு விழாச்சபையினராற் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிக்கப்பட்டது (1968).

 3. யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம்
 4. சிவகாசி சேற்றூர் இ. அருணாசலக்கவிராயர் எழுதியது; சென்னை அல்பீனியன் அச்சுக்கூடத்திலே 1898 ஆம்    ஆண்டு பதிப்பிக்கப்பட்டது; இரண்டாம் பதிப்பு, மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலையிலே 1934 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

 5. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம்
 6. யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டது. முதற்பதிப்பு நள வருடம் 1916 மார்கழி மாதம் சென்னை ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

 7. ஆறுமுகநாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமாலையும்
 8. சி. செல்லையாபிள்ளை அவர்கள் எழுதியது. 1914 ஆம் ஆண்டு கொழும்பு மீனாட்சி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. 32 பக்கங்கள்.

 9. நாவலர் வசனநடை
 10. பிரம்மஸ்ரீ சோ. ராமஸ்வாமி சர்மா அவர்களால் எழுதப்பட்டது. கொழும்பு ரோபேர்ட் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது. முதலாம் பதிப்பு 1932.

 11. நாவலர் நடைப்பாங்கு
 12. வேலணைக்கிழார் சி. சரவணனார் இயற்றியது. 1933.

 13. நாவலர் நினைவு மலர்
 14. பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் தொகுத்தது. ஈழகேசரி நா. பொன்னையா அவர்கள் வெளியிட்டது. சுன்னாகம் திருமகள் அச்சியந்திரசாலையிலே 1938 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 124 பக்கங்கள்.

 15. நாவலர் பெருமான்
 16. யோகி சுத்தானந்த பாரதியார் எழுதியது. புதுச்சேரி புதுயுக நிலையம் வெளியிட்டது. புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாஸ்ரம அச்சுக்கூடத்திலே 1948 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

 17. நாவலர் நாடகம்
 18. யோகி சுத்தானந்த பாரதியார் எழுதியது. நாவலப்பிட்டி ஆத்மஜோதி அச்சகம் 1948 ஆம் ஆண்டில் வெளியிட்டது. 122 பக்கங்கள்.

 19. Arumukha Navalar
 20. S. Sivapathasundaram, Printed at the Jaffna Saiva Pirakasa Press. 1950. 30 pages.

 21. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு
 22. (முதலாம் பாகம்) திரட்டியவர்: த. கைலாசபிள்ளை; சென்னை வித்தியாநுபாலன இயந்திரசாலை. 1954. 164 பக்கங்கள்.

 23. நாவலர் பெருமான்
 24. கா. மாயாண்டிபாரதி எழுதியது; சென்னை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டது; சென்னை ஏசியன் பிறிந்தர்ஸ் என்னும் அச்சுக்கூடத்தில் 1955இல் பதிப்பிக்கப்பட்டது; 151 பக்கங்கள்.

 25. நாவலர் சமயப்பணி
 26. சி. சீவரத்தினம் அவர்கள் எழுதியது; வண்ணார்பண்ணை சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1962 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது; 40 பக்கங்கள்.

 27. ஆறுமுகநாவலர் கதை
 28. நாரா நாச்சியப்பன் எழுதியது; சென்னை வலம்புரிப் பதிப்பகம் வெளியிட்டது; சென்னை ஐடியல் பிரிண்டர்ஸ் என்னும் அச்சுக்கூடத்தில் 1964 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

 29. Sri La Sri Arumuga Navalar, the Champion Reformer of the Hindus - A Biographical Study
 30. Written by V. Muttucumaraswamy; Published in 1965. Printed at Navalar Press, Jaffna (1965).

 31. நாவலர்
 32. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைரா நாச்சியப்பன் எழுதியது; சென்னை வலம்புரிப் பதிப்பகம் வெளியிட்டது; சென்னை ஐடியல் பிரிண்டர்ஸ் என்னும் அச்சுக்கூடத்தில் 1964 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

 33. நாவலர் மாநாடு விழா மலர்
 34. கொழும்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையினரால் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொழும்பு மெய்கண்டான் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

 35. நாவலர் விழாக் காட்சிகள்
 36. கொழும்பு மெய்கண்டான் அச்சகம் (1969) 100 பக்கங்கள்.

 37. நல்லை நகர் தந்த நாவலர்
 38. வித்துவான் சொக்கன் எழுதியது; யாழ்ப்பாணம் சண்முகநாத புத்தகசாலையில் அச்சிடப்பட்டது (1969) 83 பக்கங்கள்.

 39. நாவலர் பணிகள்
 40. ச. தனஞ்சயராசசிங்கம் எழுதியது; கண்டி நஷனல் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டது; பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்க வெளியீடு (1969), 90+10 பக்கங்கள்.

 41. நாவலர் சரித்திர ஆராய்ச்சி
 42. பண்டிதை பொன். பாக்கியம் எழுதியது; பண்ணாகம் வட்டுக்கோட்டைத் தமிழ் தமிழ்ச் சங்க வெளியீடு. (1970) 113 பக்கங்கள்.

 43. நாவலர் பெருமான்150வது ஜயந்தி மலர்
 44. கொழும்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை வெளியீடு (1972) 95 பக்கங்கள்.

 45. ஆறுமுகநாவலர் கவித்திரட்டு
 46. சுன்னாகம் புலவரகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை பதித்தது. (1972) 72 பக்கங்கள்.

 47. The Educational Activities of Arumuga Navalar
 48. Author: Thananjayarajasingham; published by Sri La Sri Arumuga Navalar Sabai (1974) 76 pages.

 49. நாவலர் சுருக்க வரலாறு
 50. வரதர் எழுதியது; யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்டது; வரதர் வெளியீடு (மார்கழி 1979). மின்னூல்.

 51. நாவலர் நூற்றாண்டு மலர்
 52. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையினரால் 1979 மார்கழியில் வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர் க. கைலாசபதி, சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பட்டது. (334 பக்கங்கள்)

 53. ஆறுமுக நாவலர்
 54. சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் வடிவம். மொழிபெயர்த்தவர்: திரு. வை. ஏரம்பமூர்த்தி. 1992 ஆம் ஆண்டு நல்லூர் திருவள்ளுவர் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

 55. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் 125ஆவது ஆண்டு நினைவு விழா மலர்

  பதிப்பாசிரியர்: முனைவர் இரா. செல்வகணபதி; வெளியீடு: அவுஸ்திரேலியா மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம். மயிலாடுதுறை பரணி ஆப்செட் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டது. (2004) 88 பக்கங்கள்.

 56. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் - வரலாற்று ஒலிப்பேழைகள

  குரல் தந்தவர்: முனைவர் இரா. செல்வகணபதி; வெளியீடு: அவுஸ்திரேலியா மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம். (2004) 3 ஒலிப் பேழைகள்.

  Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

  Return to Top